CLOSE
CLOSE AD

40-க்கும் மேற்பட்ட உள்ளூர் வெற்றிப்படங்களை இலவசமாக ஆஸ்ட்ரோ மற்றும் என்ஜோய் மூலம் கண்டு மலேசியாவைக் கொண்டாடுவோம்

  • 23 Aug 2019
  • Tags:
40-க்க-ம்-ம-ற்பட்ட-உள்ள-ர்-வ-ற்ற-ப்படங்கள-இலவசம-க-ஆஸ்ட்ர-மற்ற-ம்-என்ஜ-ய்-ம-லம்-கண்ட-மல-ச-ய-வ-க்-க-ண்ட-ட-வ-ம்

தேசியத் தினத்தை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ மற்றும் என்ஜோய் வாடிக்கையாளர்கள் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய எச்.டி அலைவரிசையான Malaysiaku (CH 700)-யில் 40-க்கும் மேற்பட்ட உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் இலவசமாக ஆகஸ்ட் 30 தொடக்கம் செப்டம்பர் 17 வரை கண்டு மகிழலாம். இந்த உள்ளடக்கங்களை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, ஆன் டிமாண்ட், ஆஸ்ட்ரோ கோ மற்றும் என்ஜோய் வாயிலாக அணுகலாம்.

நம்முடைய உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல்வகை கலாச்சாரங்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாண்டு மலேசியாவைக் கொண்டாடும் வகையில்,  ஆஸ்ட்ரோ மலேசியர்களை ஒன்றிணைத்து மற்றும் தொடர்ந்து நமது வளமான பாரம்பரியத்தை நினைவூட்டுகின்ற 40-க்கும் மேற்பட்ட பன்மொழி உள்ளூர் திரைப்படங்கள் கொண்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் மலேசியர்களுக்கு மீண்டும் அன்றைய நினைவுகளைக் கொண்டுவரும் அதை நேரத்தில், இளைய தலைமுறையினருக்கு வரலாற்றையும் பெருமையையும் உணர்த்துகின்றது. இளையவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மலேசியர்களும் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டறியலாம். 

பிரபலமான மலேசிய திரைப்படங்கள்
இந்தக் காலகட்டத்தில், Malaysiaku அலைவரிசையில் பி. ராம்லீயின், Pendekar Bujang Lapok, Do Re Mi, Ali Baba Bujang Lapok, Nujum Pa’ Blalang மற்றும்  Sergeant Hassan, யாஸ்மின் அஹ்மத்தின்  Sepet, Gubra, Talentime, Mukhsin, Rabun மற்றும் Muallaf; அத்துடன் அண்மையில் வெளிவந்த வெற்றிப் படங்கள், அவற்றில் சில மலேசிய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வரலாற்று சாதனைப் படைத்த சியு கெங் குவானின் Ola Bola மற்றும் The Journey, மாமாட் காலிட் இயக்கத்தில் Hantu Kak Limah; கார்த்திக் ஷாமளனின் என் வீட்டு தோட்டத்தில்; ஷம்சும் யூசுப் Munafik 1 & 2; அட்ரியன் தே Paskal; ஷபிக் யூசுப் Abang Long Fadil 1 & 2 மற்றும் இன்னும் பலத் திரைப்படங்கள் அடங்கும்.

பொழுதுபோக்கு ஆவணப்படங்கள்
வாடிக்கையாளர்கள் Malaysiaku ஆவணப்படங்களான Tun Dr. Mahathir: Perjuangan Belum Selesai, மலேசியாவின் 2018-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் குறித்த ஆவணப்படம்; Road to Nationhood, 1992- இல் மலேசியாவின் பூப்பந்து மகிமையின் பயணத்தை மையமாகக் கொண்ட Serve & Smash: The Thomas Cup 1992; குத்துச்சண்டைப் போட்டியில் எவ்வாறு மலேசிய உலகளாவிய ரீதியில் பெயர் பதிக்கின்றது எனும் கதையாகக் கொண்டு வரும் Sapok Biki: The Iban Boxer; மற்றும் சுசுகி கோப்பை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவுக்கு எதிராக மலேசியா எதிர்கொண்டு புதிய ஒரு சூழ்நிலையை புதுப்பித்தைப் படம்பிடித்து காட்டும் Tigers Resurrected – The Suzuki Cup 2010. அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் 50 ஆண்டுகால மலேசிய சீன பாப் இசையை மீண்டும் பார்வையிடுவதுமட்டுமின்றி கலைத்துறையின் சவால்களை At the Equator, We Sing கண்டறியலாம். அதோடு, Work to Live நிகழ்ச்சியில் பாரம்பரிய கைவினைகளில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் இளைய தலைமுறையைப் பற்றியும் #JomPolam நிகழ்ச்சியில் ஒரு இளம் பெண் மலேசியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள அழகிய காட்சிகளும் பாரம்பரியங்களும் கண்டு களிக்கலாம்.


குழந்தைகளுக்குச் சிறப்பு நிகழ்ச்சிகள்
இளைய பார்வையாளர்கள் ‘Wizards of Waverly Place’ எனும் உள்ளூர் கதையைத் தழுவி தயாரிக்கப்பட்ட Wizards of Warna Walk நிகழ்ச்சியில் மந்திர சக்திகளைக் கொண்ட ஒரு சாதாரண மலேசிய குடும்பத்தின் சாகசங்களைக் கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி, Upin & Ipin நிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கண்டு மகிழலாம்.

மேலும், Rocketfuel கலைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு Oh Malaysiaku பாடலும் அதன் காணொளியையும் மலேசியர்கள் கண்டு மகிழலாம். இப்பாடலை Usop, Masya Masyitah, William, மற்றும் Lil J உடன் Ceria Megastar Ministar நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் Timah, Cici, Eiffel மற்றும் Aliff ஆகியோர் பாடியுள்ளார்கள்.
 
Malaysiaku (அலைவரிசை 700) குறித்த மேல் விவரங்களுக்கு watchod.com அகப்பக்கத்தை நாடுங்கள்.