CLOSE
CLOSE AD

ஆஸ்ட்ரோ ரிம 2.7 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது

  • 26 Sep 2018
ஆஸ்ட்ர-ர-ம-2-7-ப-ல்ல-யன்-வர-வ-ய்-ஈட்ட-ய-ள்ளத

ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் | 31 ஜனவரி 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள்

  • பல்வகைத் தன்மை, சவால்மிக்க சந்தையில் வருமான ஈட்டலை நிலைப்பெறச் செய்துள்ளது
    • கட்டண தொலைக்காட்சி ஆர்பு ரிம 99.9 -ஆகப் பதிவு, வருவாய் 2.7 பில்லியன்
    • வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) ரிம 750 மில்லியன்
    • வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI)  ரிம 191 மில்லியன்
    • வலுவான பணப்புழக்கம் (FCF)  ரிம 691 மில்லியன் இரண்டாவது இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 2.5 சென் வீதம்
  • இணைய வியாபாரமான ‘கோ ஷோப்’ (Go Shop) 34% உயர்ந்து ரிம 177 மில்லியன் வருவாய் பதிவு செய்துள்ளது
  • ‘என்ஜோய்’ வருவாய் 15 உயர்ந்து 53 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது
  •  ‘எடெக்ஸ்’ 11% குறைந்து ரிம 312 மில்லியன் பதிவு செய்துள்ளது
  • மொத்தம் வாடிக்கையாளர்கள் 7% உயர்ந்து 5.6 மில்லியன் கொண்டுள்ளது
ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில், “சவால்மிக்க சந்தை மற்றும் போட்டிமிக்க ஊடகத் துறையில் தடைகளைச் சமாளித்து நிலைத்து நிற்கும் அதே வேளை, ஆஸ்ட்ரோ தொடர்ந்து வருமானத்தை உற்பத்தி செய்கிறது;  செலவுகளில் கட்டுக்கோப்பாக இருக்கிறது; மூலதன நிர்வாகத்தில் ஆக்ககரமாகச் செயல்படுகிறது. இந்த வேளையில் இரண்டாவது இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 2.5 சென் வீதம் ஆகும் என்பதை இயக்குநர் வாரியம் பெருமனதுடன்  அறிவிக்கின்றது”.
 
ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ள ஹென்ட்ரி டான் கூறுகையில், “ வரவு செலவு திட்டத்தின் 2018 FIFA உலகக் கோப்பிற்கான உள்ளடக்க செலவினங்கள்  அதிகமாக செலவாகியுள்ளது. அதை வேளையில்,  ஜூன் 1-ஆம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் 31 வரை வரி விதிக்கப்படாத பச்சத்தில் விளம்பாரங்கள் குறைவு மற்றும் ரிங்கிட் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணிகள் எங்களின் நிதியாண்டின் முடிவுயைப் பதித்துள்ளது. இருப்பினும், டிஜிட்டல் தளங்களில், இணைய வியாபாரம்  உரிம வருமானம் மற்றும் திரையங்களில் விற்பனை ஆகியவற்றிலிருந்து டிவியும் வானொலிகளும் தொடர்ந்து நிலையான வருவாயை ஈட்டியுள்ளோம்”.
 
அனைத்து தளங்களில் ஆழமான வாடிக்கையாளர் ஈடுபாடு

அனைத்து தளங்களிலும் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அதிகரிப்பதில் கடமைப்பட்டுள்ளோம். தற்போது, 23 மில்லியன் தொலைக்காட்சி பார்வையாளர்கள், வாராந்திர ஆஸ்ட்ரோ வானொலியின் கேட்பவர்களின் எண்ணிக்கை 16.9 மில்லியன், டிஜிட்டல் தளத்தில் 7.0 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 1.5 மில்லியன் இணைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம்.  எங்களின் சேவையை 5.3 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 76% வீடுகளில் ஊருவியுள்ளோம்.
 
920,000 வீடுகளில் ஆஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவை இணைக்கப்பட்டுள்ளது. இவை 44% உயர்ந்து ஆன் டிமாண்ட் சேவையில் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது மூன்று மடங்கு அதிகரித்து 23.7 மில்லியன் கொண்டுள்ளது.  ஆஸ்ட்ரோ கோ செயலி பயனர்கள் எண்ணிக்கை 50% உயர்ந்து 1.9 மில்லியன் பதிவுச் செய்துள்ளது.
 
திடமான இணைய வியாபாரம் செயல்திறன்

ஆஸ்ட்ரோவின் இணைய வியாபாரமான ‘கோ ஷோப்’ சிறந்த சேவையைப் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. ‘கோ ஷோப்’ சேவை 34% உயர்ந்து ரிம 177 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ள வேளையில் 50% உயர்ந்து மொத்தம் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவுச் செய்துள்ளது.
 
மென்மையான எடெக்ஸ் சந்தை

தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு 75% மற்றும் ஆஸ்ட்ரோ வானொலியின் கேட்பவர்களின் எண்ணிக்கை 16.9 மில்லியன் உடன் ஆஸ்ட்ரோவின் உள்ளடங்கள் விளம்பரதாரர்களை அதிகமாக ஈர்த்துள்ளது. ஆஸ்ட்ரோவின் ‘டிவி எடெக்ஸ்’ மற்றும் ‘ரெடெக்ஸ்’ பங்கு முறையே 41% மற்றும் 75% என தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது.
 
ஆஸ்ட்ரோவில் புதிய பிரீமியர் லீக் பருவங்கள் பிரத்தியேக ஒளிபரப்பு

அடுத்த 2021/22 வரை மூன்று பருவங்களுக்கு பிரீமியர் லீக் பிரத்தியேக ஒளிபரப்பு உரிமைப் பெற்றுள்ளதை ஆஸ்ட்ரோ பெருமனதுடன் அறிவிக்கின்றது. காற்பந்து ரசிகர்கள் 380 ஆட்டங்களின் நேரலையை எச்.டி-யில் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிப்பது மட்டுமின்றி குறிப்பிட்ட ஆட்டங்களை 4K UHD ஒளிபரப்பிலும் காணலாம்.
 
இவ்வாண்டு 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசியா விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்து  ‘Home of Sports’ எனும் இடத்தை மேன்மேலும் வலுப்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆஸ்ட்ரோவில் அனைத்து தளங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 11.6 மில்லியன் மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் 1 மில்லியன் கொண்டு 120 ஆயிரம் உலக கோப்பை பாஸ் விற்கப்பட்டுள்ளது. இதன் வருவாய் 2014-ஆம் ஆண்டை ஒப்பிடக்கையில் 50% உயர்ந்துள்ளது.
 
சாதனைகளைத் தகர்ப்பதும் உள்ளூர் உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்துவதும்

ரிம 18 மில்லியன் வசூல் சாதனைப் படைத்த முந்தைய திரைப்படம் தொடர்ந்து, அண்மையில் திரையரங்களில் வெளிவந்த ‘Hantu Kak Limah’ திரைப்படம் இரண்டு மடங்கு வசூலை ஈட்டி ‘Mission: Impossible Fallout மற்றும்  ‘Marvel’ தயாரிப்பிலான  ‘Deadpool 2’ ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களை முறியடைத்து சாதனைப் படைத்துள்ளது. அதை வேளையில், ஆஸ்ட்ரோவின் தயாரிப்பில் ‘Big Stage’ நிகழ்ச்சியை 18.8 மில்லியன் ரசிகர்கள் டிஜிட்டலும் 2.0 மில்லியன் பேர் தொலைக்காட்சியிலும் கண்டு களித்துள்ளார்கள். ஆஸ்ட்ரோவின் கலைஞர்களும் எங்களின் உள்ளூர் உள்ளடங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைவதில் பெரிதும் துணைபுரிந்துள்ளார்கள்.   
 
விரிவான கண்ணோட்டம்

ஹென்ட்ரி டான் கூறுகையில்,”வருங்காலங்களில், எங்களின் அடுத்த செயல்பாட்டுதிறனை மேம்படுத்துவதிலும் முக்கிய சேவைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவோம். அதை வேளையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் புதிய இடைமுகத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவின் பிரீமியம் வாடிக்கையாளர் அனைத்து தளங்களிலும் தடையற்ற பார்க்கும் அனுபவத்தையும் 4K UHD ஒளிபரப்பு சேவையையும் அறிமுகப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.   

Media contact
Tammy Toh,
Vice President, Group Communications,
Email: tammy_toh@astro.com.my;
Tel: 03-9543 6688 ext 2046/Mobile: +60-12 322 5184
 
Ng Kar Yean,
Assistant Vice President, Communications
Email: kar-yean_ng@astro.com.my
Tel: 03-9543 6688 ext 2449/Mobile: +60-12 317 3726



Suggested Articles

Win-RAAGA-Exclusive-Merchandise-With-Raagavil-Siranthe-100 Lifestyle
ARTICLE
  • 10 Aug 2020

Win RAAGA Exclusive Merchandise With 'Raagavil Siranthe 100'

RAAGA fans can stand a chance to win an exclusive T-shirt of the leading radio station by joining the on-air contest "Raagavil Siranthe 100" from August 10 to 21, 2020. 

RAAGA-Announcers-Suresh-and-Ahila-Talk-About-Their-10-Years-Friendship-More Entertainment
ARTICLE
  • 07 Aug 2020

RAAGA Announcers Suresh and Ahila Talk About Their 10-Years' Friendship & More

RAAGA's Kalakkal Kaalai announcers Suresh and Ahila have been good friends, on and off-air for the last decade. Here, they talk about their friendship and what makes them click. 

NJOI-Offers-More-Prepaid-Choices-Contest-With-Prizes-Worth-Up-To-RM21-000 Entertainment
ARTICLE
  • 04 Aug 2020

NJOI Offers More Prepaid Choices & Contest With Prizes Worth Up To RM21,000!

NJOI is offering its customers new channels, more prepaid choices and the chance to win up to RM21,000 worth of prizes, via the 'Beli Lebih, NJOI Lebih' contest. 

Health-Benefits-of-Tulsi Lifestyle
ARTICLE
  • 03 Aug 2020

Health Benefits of Tulsi

Tulsi is the “Queen of Herbs” and the most sacred herb in India!

Singles-Who-Visit-This-Temple-Can-Get-Married-Without-Obstacles Lifestyle
ARTICLE
  • 30 Jul 2020

Singles Who Visit This Temple Can Get Married Without Obstacles?

Devotees visit this pilgrimage site to get their marriage obstacles removed...

The-Power-of-Aum-Mantra Lifestyle
ARTICLE
  • 30 Jul 2020

The Power of ‘Aum’ Mantra

These are the benefits of the "Aum" mantra...